ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக (தமிழ்) எம்.ஏ.எம்.நிலாம் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பணிப்பாளராக (தமிழ்)மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் நியமனம் பெற்றுள்ளார்.
இளம் ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடாகவும்ஏனைய தேசியப் பத்திரிகைகள் உண்டாக்கவும் உருவாக்கும் பணியில் அரும்பணிமாற்றிய அனைவரும் நிலாம் நாநா என அன்புடன் அழைக்கும் இவர் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும் ஊடகவியலாளரும் ஆவார்.
பல தேசிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகவும் தினகரன் தினசரியின் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் பல அமைச்சர்களின் ஊடக ஆலோசகராகவும் கடமையாற்றி அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் ஆவார்.
No comments