கங்குலியின் தலை விலா எலும்புகளை உடைக்குமாறு வேண்டப்பட்டேன் - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சொய்ப் அக்தர் கூறுகிறார்
1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போட்டி ஒன்றில் இந்திய வீரர் சவ்ரவ் கங்குலியின் தலையையும் விலா எழும்பையும் குறி வைத்து தாக்கி காயப் படுத்துமாறு தான் அறிவுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று தான் கங்குலியின் விலா எலும்புகளை பந்தினால் பதம் பார்த்தேன் எனவும் தெரிவித்துள்ளார். இங்கு அறிவுறுத்தல்களை சலீம் மாலிக் தனக்கு வழங்கியதாகவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போ விக்கட் வேண்டாமா? என தான் அவரிடம் வினவிய போது அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் கங்குலியை பதம் பார்ப்பது தான் உமக்கு தரப்பட்ட பொறுப்பு என அவர்கள் பதில் கூறினர் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.
எனினும் சவ்ரவ் கங்குலி இதற்கெல்லாம் அஞ்சாத ஒரு சிறந்த வீரர் அவரிடம் தனி மதிப்பு வைத்திருக்கிறேன் எனவும் சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.
No comments