மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க பல்கலைக்கழகத்தில் வாய்ப்புக்கள் அதிகம் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்.
நூருல் ஹுதா உமர்
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் பல்கலைக்கழகத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பதவியேற்று ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர் செயற்பாட்டு மையத்திறப்பு விழா (17) புதன்கிழமை பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மையத்தினைத் திறந்து வைத்தார்.
சகல வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டு மையத்தில் இளம்கலை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் வழிகாட்டல் அலகு, சமூக நல்லிணக்க மைய்யம், மாணவர் பிரத்தியேக நூலகம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்திற்கு 120 மில்லியன் ரூபாய் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மாணவர் மையத்திற்கு சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஒரு தொழிலை மையமாகக் கொண்டு பள்ளியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இளைஞர்களின் மாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் தொழில் பற்றிய ஆலோசனை, வேலைவாய்ப்பு, திறன்களை மேம்படுத்தல், தொழில்துறையுடன் வலையமைத்தல், பணி அனுபவத்தைப்பெறுதல், பட்டதாரி வேலைவாய்ப்பு, பயிற்சித் தொகுதியில் வடிவில் பாடத்திட்டத்திற்குள் தொழில் வழிகாட்டுதலை ஒருங்கிணைக்க ஆசிரியர்களுக்கு உதவுதல். தொழில்முறை திறன் மேம்பாட்டு, தொழில் தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றன மாணவர்களுக்கு பயணடைய முடியுமெனத் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் முழுத்திறனை அடைவார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறன்களை உணர்ந்து வழிகாட்டுதல், கல்வி, பயிற்சி மற்றும் தொழில் தேர்வுகளை மேற்கொள்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை திட்டமிடே அவர்களுக்குப் பயிற்சியளித்து தனி நபர், குடும்பம், சமூகம் மற்றும் சமூகத்தின் தனிப்பட்ட கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் எனக்கூறினார்.
மிகப்பெரிய தேவைகளில் ஒன்று கவர்ச்சிகரமான ஆராய்ச்சி சூழலுடன் கூடிய இடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு கட்டிடத்தை நிர்மாணிக்க முயற்சித்தோம். இன்று கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு காண்பதில் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது .
இது ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் நிச்சயமாக வளாகத்தின் அடையாளமாக மாறும் மாநாடு மற்றும் கருத்தரங்குகளுக்கான விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது.
இக்கட்டிடத்திலிருந்து பல புதிய அற்புதமான முடிவுகள் வெளிவரும் என்றும், பல்கலைக்கழகத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றாக விரைவில் மாறும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன்.
உயர்கல்வி அமைச்சும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்து உலக வங்கி மூலம் இக்கட்டிடத்தின் கட்டுமானத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. முதல் பிரிவு, சிறப்பு கல்வி தேவைகளில் நிபுணத்துவம் பெற்று இத்துறையில் ஆராய்ச்சி செய்யும் முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இத்திறப்பு விழாவில் பல்கலைக்கழகப்பேரவை உறுப்பினர் பொறியியலாளர் என். டீ.சிராஜுதீன் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பிரதிப்பதிவாளர் ஏ.எம். நௌபர், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி ஏ.சபீனா எம்.ஜீ.ஹஸன், தொழிநுட்பபீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.மஜீத், பதில் நிதியாளர் வன்னியாராச்சி, பல்கலைக்கழக உலக வங்கி நிதித்திட்டங்களின் பொறுப்பாளர் பேராசிரியர் எம்.ஏ.எம்.றமீஸ், கலை, கலாசார பீடத்தின் நிகழ்த்திட்ட ஒருங்கிணைப்பாளர் பௌசுல் கரீமா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments