Breaking News

அவுஸ்திரேலியாவின் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத் தலைவராக ரிசா ஜமால் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அவுஸ்திரேலியவில் இயங்கும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவராக ரிசா ஜமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர், ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கம் (USMAA) மற்றும் சமூகத்தில் நன்கு அறிந்த நபராக, கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக மெல்போர்னில் வசிக்கிறார். அத்தோடு, சுமார் 30 வருட காலம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்துக்கு பக்கபலமாக இருந்து உதவியுள்ளார்.  


CIMA (UK) மற்றும் CA (Australia) உடன் செயற்படும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், இப்போது அவுஸ்திரேலியாவின் USMAA (ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்க) த்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்காவின் உயர்பீட உறுப்பினர் எம்.ரி.எம். றிஸ்வியும் கலந்து கொண்டார்.





No comments

note