உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!
"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"(குர் ஆன்)
நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் வழிகாட்டலில் புத்தளம் நகரசபையினால் எதிர்வரும் 17 ம் திகதி புதன் கிழமை (17-8-2022) காலை 8 மணிமுதல் பகல் 2 மணிவரை இரத்த தான நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் எமது புத்தளம் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு நகரசபையினால் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இரத்த தானம் செய்வோம்.
மனித உயிர் காப்போம்.
No comments