மைதானம் இல்லாத அதிகஷ்ட பிரதேச பாடசாலையில் இருந்து மாகாண மட்டத்துக்கு தெரிவான மாணவர்கள் !
நூருல் ஹுதா உமர்
பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து இரு மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவாகி உள்ளனர். இது அதிகஷ்ட பிரதேச பாடசாலை ஆகும். இங்கு விளையாட்டு மைதானம் கிடையாது. இவ்வாறு இருக்க நீளம் பாய்தல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் ஒவ்வொரு மாணவர் சாதனை புரிந்து உள்ளனர்.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் எஸ். ரகுநாதன், பிரதி அதிபர் ரி. நடேசலிங்கம் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்கள். இவர்களை பயிறுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கு பெற்றோர், பாடசாலை சமூகம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
No comments