ஆயுத போராட்டம் சாத்தியம் இல்லை இதனை வரலாறு கற்று தந்துள்ளது ஆயுதப் போராட்டம் நடத்திய விஜேவீரவின் மகன் கூறுகிறார்
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ள பாடமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோகன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார் .
எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் அவர் இக் கருத்தினை வலியுறுத்தினார். ஜனநாயக அரசியலமைப்பு கட்டமைப்புக்குப் பொருத்தமானதாகவே இலங்கையின் ஆட்சி மாற்றங்களும் இடம் பெறவேண்டும். அரகல போராட்டம் தோல்வியை தழுவியதற்கு காரணம் அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்மை யாகும் எனவே தேர்தல்களின் மூலம் ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வருவதை எமது வழிமுறையாகக் கொண்டு செயல்பட முடிவு செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments