மாவனல்லையில் 'இஸ்லாம் கூறும் திருமண வாழ்க்கை' சிறப்பு பயான் நிகழ்ச்சி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாவனல்லையில் 'இஸ்லாம் கூறும் திருமண வாழ்க்கை' எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (11) வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் 11:45 வரை மாவனல்லை ஹிங்குலோயா, மஸ்ஜிதுல் ஹுதாப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
திருமணமாகாமல் இருக்கும் மற்றும் திருமணமாகிய ஆண், பெண் இருபாலாருக்கும் மற்றும் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட பயான் நிகழ்ச்சியில், பிரபல உளவள ஆலோசகரும் மார்க்க அறிஞருமான மௌலவி அப்துல் ஹமீத் (ஷரயி) வளவாளராகக் கலந்து கொள்கிறார்.
இச்சிறப்பு பயான் நிகழ்ச்சியில், முஸ்லிம் சமூகத்தில் ஏன் அதிக விவாகரத்துக்கள்?, திருமணத்தால் அடையும் உறவுகளையும் எவ்வாறு கையாள வேண்டும்?, திருமணத்தின் பின் அன்பு பாசத்தின் வித்தியாசங்கள்.., சுவனத்திலும் கணவன் மனைவியாக குடும்பமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்னும் தலைப்புகளில் பல தரப்பட்ட விடயங்கள் ஆலோசனையுடன் கூடியவாறு தெளிவூட்டப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments