கடையாமோட்டை தேசிய பாடசாலை மாணவி அப்துல்லா பாத்திமா அக்ஸா மருத்துவ பீடத்திற்கு தெரிவு!
வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் படி கடையாமோட்டை தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி அப்துல்லா பாத்திமா அக்சா மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 3A பெறுபேறுகளுடன் 2.4176 வெற்றுப் புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 163 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் ஆரம்பகல்வி புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை , சாதரண தரம் புத்தளம் பாத்திமா தேசியக்கல்லூரியிலும் , உயர் தரம் கடயாமோட்டை தேசிய பாடசாலையில் கல்வி கற்றார்.
புத்தளம் சாஹிரா தேசியக்கல்லூரியின் கணிதம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் அஸ்லம் மற்றும் மாவட்ட செயலகத்தில் மத்தியஸ்த ஆணைக்குழுவில் பணியாற்றும் சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரின் ஒன்று விட்ட சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments