சல்மான் ருஷ்திக்கு கத்திக்குந்து ஒரு கண் செயலிழப்பு ஒரு கை மற்றும் சுவாசப்பையிலும் கடும் காயம்
முஸ்லிம்களின் வெறுப்புக்குள்ளான சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இன்று அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் கடும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்n இவரது ஒரு கண்ணும் ஒரு கையும் செயலிழக்கும் ஆபத்து நிலை நிலவுவதாகவும் சுவாசப்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இவர் செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவியாலேயே சுவாசிப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்கு வந்த இவரை குறிவைத்திருந்த 24 வயதான இளைஞன் ஒருவன் இவர் உரையாற்றுவதற்காக மேடையை நெருங்கி வந்த போது இக்கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த ருஷ்டி பாதுகாப்பு அதிகாரிகளால் பென்சில் வேனியா வைத்தியசாலைக்கு அவசரமாக ஹெலிகொப்டரில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
1988 ஆம் ஆண்டில் முஸ்லிம்களை புண்படுத்தும் சட்டனிக் வேசஸ் நூலை எழுதியதனால் இவருக்கு சர்வதேச ரீதியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தலைக்கும் சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதால் இவர் இன்று வரை தலைமறைவாகி வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியரான 74 வயதுடைய சல்மான் ருஷ்டி கொலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த 34 வருடங்களாக அமெரிக்காவுக்கு தப்பி வந்து மறைந்து வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments