Breaking News

விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் வழங்கல்

(சர்ஜுன் லாபீர்)

மத்தியமுகாம் சவளக்கடை பிரதேசத்தில் உள்ள அமீர் அலி விளையாட்டுக் கழகம் மற்றும் சவளக்கடை றூல் பிரக்கஸ் உதைபந்தாட்ட அக்கடமிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  உதைப்பந்தாட்ட காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15) நாவிதன்வெளிபிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார்.


இந் நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ ரஜாப்தீன்,எம்.டி ரிபாஸ்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







No comments