சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.எம். பிக்கீரின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவாலையடைந்தேன் - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
ஊடகத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் பிராகாசித்துக்கொண்டிருந்த இறக்காமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.எம். பிக்கீர் ஆசிரியரின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்தில் பெயர் குறிப்பிட்டு கூறக்கூடிய ஊடகவியாலாளரான பிக்கீர், சுமார் 34 வருடங்களாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாளராக பணியாற்றி, சமூக நலனுக்காக பல்வேறு வகைகளில் பங்களிப்புச் செய்துள்ளார்.
கல்விச் சேவையில் முழுநேர பணியாளராக இருந்தாலும், ஊடகத்துறையிலும் சமாந்தரமாக செயற்பட்டு, மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை ஊடகங்கள் வாயிலாக முந்திக்கொண்டு வெளிக்கொணர்ந்தார்.
காலஞ்சென்ற பிக்கீர் மற்றும் அவரது சகோதரர் நிசார் ஆசிரியர் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால போராளிகளாக இருந்தனர். அன்னார் சுகயீனமுற்றிந்தபோது அவரது இல்லத்துக்குச் சென்று நலம்விசாரித்தேன்.
அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருடனும் சகஜமாகவும் அன்பாகவும் பழகக்கூடியவரான பிக்கீரின் பாவங்களை மன்னித்து, மறுமைநாளில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக.
No comments