ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அமைப்பினால் மையவாடி சிரமதானம் முன்னெடுப்பு !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பினால் சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடியினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டமொன்று இன்று ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பின் பொதுச்செயலாளர் லாபீர் சிப்னாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
பற்றைக்காடாக வளர்ந்திருந்த சிறிய மரங்கள், புற்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன் அழகாக சிரமதானம் செய்யப்பட்டது. இந்த பணியில் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக நலன் விரும்பிகள், சாய்ந்தமருது நடுத்துரை மீனவர் சங்கத்தினர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.
No comments