அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை விளையாட்டு கழகங்களுக்கு ஹரீஸ் எம்.பியினால் உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள அக்கரைப்பற்று விளையாட்டுக்கழகம், ஸூ சிட்டி விளையாட்டுக் கழகம், மயாஸ் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதைப்பந்தாட்ட காலணிகள், பந்துகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் ஏ.எல். றமீஸ் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட கால்பந்து விளையாட்டு துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டு பல்வேறு பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொடர் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா, விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், பிராந்திய சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச சூப்பர் சொனிக் விளையாட்டு கழகம், எவர் டொப் விளையாட்டு கழகம், லக்கி விளையாட்டு கழகம், ஹைலண்ட் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், காலணிகளும் அட்டாளைச்சேனையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.
No comments