Breaking News

இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீன இலக்குகள் மீது நடத்திய தாக்குதலில்32 பேர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்த 200 இற்கும் அதிகமானோர்வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பலஸ்தீன குழுக்களின் இஸ்ரேல் மீதான தாக்குதல் இலக்குத் தவறி பலஸ்தீனில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

ஜிஹாத் குழுக்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறும் இஸ்ரேல் திட்டமிட்டு அகதி முகாம்களை தாக்கி நிராயுத மக்களை கோழைத்தனமாக கொன்றுவருவதாக பலஸ்தீன அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இந்நிலையில் அமெரிக்க எகிப்து நாடுகள் உயிர்ச் சேதங்களை தவிர்க்க அவசரமாக மத்தியஸ்த நடவடிக்கைகளுக்காக தூதுக்கு குழுக்களை இரு நாடுகளுக்கும் அனுப்பி உள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.




No comments

note