Breaking News

பிரபலங்களை இணைத்து ஐ.தே.க.வை மறுசீரமைக்க திரைமறைவில் திட்டம் SLFP ,SJB, SLPP கட்சி முக்கிய புள்ளிகள் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியை புனரமைத்து எதிர்வரும் தேர்தல்களில் சக்தி வாய்ந்த ஒரு அமைப்பாக முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க திட்டங்களை வகுத்து வருவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளில் இருந்து அமைச்சுப் பதவிகள் மற்றும் உயர் பதவிகளைப் பெறுபவர்கள் உட்பட  தற்போது சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் .பலரும் இதற்கு விருப்பம் தெரிவித்து மூன்றாவது அரசியல் சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இதற்கான இராஜதந்திர முயற்சிகள் திரைமறைவில் தற்போது இடம் பெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




No comments

note