Breaking News

முகக் கவசம் அணிவது கட்டாயம் ; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது.

பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகமூடி அணிவது தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.







No comments

note