Breaking News

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவேன் -விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர கூறுகிறார்.

தந்தையின் கொள்கைகளை  நடைமுறைப்படுத்தி நாட்டை  முன்னேற்றுவேன்.


இந்த நாட்டின் அடுத்த தலைவராக அதிகாரத்தை கைப்பற்றுவேன் என மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான றோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர தெரிவிக்கிறார்.


நாட்டு மக்கள் கேட்கும் ஆட்சி நிர்வாகம் மாற்றம் என்னிடம் இருக்கிறது தாய் நாட்டின் விமோசனத்துக்காக எனது தந்தை முன் வைத்த திட்டங்களை  எனது தலைமையில் நாட்டின இளைய தலை முறையின் ஒத்துழைப்புடன் இரண்டாவது தலைமுறை ஆட்சியை இந்நாட்டில் ஏற்படுத்துவேன்.


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments

note