Breaking News

நெருக்கடிகள் நீங்குவதற்கு இறைவனை இறைஞ்சுவோம். - ஈதுல் அழ்ஹா பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்-

Let us Pray for Democratic Strength to Prevail on Eid-ul-Alha 

நாட்டில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்த படுமோசமான குடும்ப ஆட்சியை மக்களின் ஒன்று திரண்ட பலம், துரத்தியடித்துள்ள நிலையில் , அராஜகம் அகன்று,மக்கள் எல்லாவிதமான நெருக்கடிகளிலிருந்தும் மீண்டெழுவதற்கு இந்த நன்னாளில் இறைவனை இறைஞ்சுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதில்  மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையிலும், ஏனைய உலக நாடுகளிலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில்   ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்பெருநாளைகொண்டாடும் இவ்வேளையில்,அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கின்றேன்.இறைதூதர்களான. இப்றாஹீம்(அலை),இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தின் வலிமையை வலியுறுத்தும் இந்தப் பெருநாள்,  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நியதிப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எங்களை வந்தடைந்திருக்கின்றது. 

 நாட்டில் அபகீர்த்திக்கு ஆளாகிய அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கையின் அரசியல் கட்டமைப்பு முற்றாகச் செயலிழந்து, நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள மிகவும் நெருக்கடியான நிலைமையிலும் கூட,ஆட்சிபீடத்திலிருந்து அகன்று நாட்டில் சுமூக நிலை தோன்ற வழிவிடுமாறு சகல இன மக்களும் ஒருமித்து எழுப்பிவந்த குரல் நேற்றுவரை  புறக்கணிக்கப்பட்டு வந்தது. 

மக்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாட்டுச் செலாவணியின்மையாலும், நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியாலும் பெற்றோல்,டீசல்,எரிவாயு,மருந்து மற்றும் தேவையான  உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சிரமங்களுக்கு மத்தியில்  அப்பாவிப் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்பதற்கு இன்னமும் கூடநேர்ந்திருக்கிறது.விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்திருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் ,இயல்பு வாழ்க்கை என்பன சீரழிந்திருக்கின்றன.பொதுவாக நாட்டின் எல்லா சமுகத்தினரும் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.




No comments

note