Breaking News

தமிழகத்தின் இரண்டாம் கட்ட உதவிகள் சாய்ந்தமருது மக்களுக்கு பகிர்ந்தளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழக முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 

இரண்டாம் கட்ட உதவிகள் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் நேற்றுமுன்தினம் (25) திங்கட்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டன.


சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 815 பத்து கிலோகிராம் அரிசிப்பொதிகளும் 253 ஒரு கிலோகிராம் பால்மா பைக்கற்றுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 


பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு உதவும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்த பால்மா பைக்கற்றுகள் மற்றும் அரிசிப்பொதிகள் என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டன.


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட்ட  இவ்வுதவிகள் தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு இன, மதம் பாராது அன்பளிப்பாக வழங்கி இருப்பது மிகப் பெரும் உதவியாக இருக்கின்றது என்றும் இவ்வாறான மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் தமிழக முதலமைச்சர் நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ தாம் பிரார்த்திப்பதோடு, அவருக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் சாய்ந்தமருது மக்கள் சார்பில் மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பயனாளிகள் தெரிவித்தனர். 


சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமைக்கு கட்டுப்பட்டு, அவரது வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் எந்த உதவிகள் வந்தாலும் அதனை தன்னலம் கருதாமல் மக்கள் நலனை மட்டும் கருத்திற் கொண்டு அநீதி ஏற்படாமல் பங்கிட்டு, அரும்பணியாற்றி வரும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும்  பயனாளிகள் தமது  நன்றியைத் தெரிவித்துக் கொண்டதை காணக்கூடியதாகவும் இருந்தது.









No comments

note