புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம்
18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.
கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது, முன்னதாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள், மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பிரதமர் தினேஸ் குணவர்தன, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராகவும்,
கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும்,
கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்தவும்,
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும்,
சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,
விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீரவும்,
நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும்,
சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும்,
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரனவும்,
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும்,
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரியும்,
பௌத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சராக விதுர விக்ரமநாயக்கவும்,
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும்,
சுற்றாடல் அமைச்சராக ஹாபிஸ் நஷீர் அஹமட்டும்,
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்கவும்,
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும்,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸும்
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் ருவன்ஜீவ பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.
No comments