மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.
நூருல் ஹுதா உமர்
காத்தான்குடி நகரசபையினால் ஆற்றங்கரையில் அமைக்கப்படவுள்ள மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக காத்தான்குடி நகர பிரதி நகரமுதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் கலந்துகொண்டார். மேலும் உறுப்பினர்களான ஏ.எம்.எம். ரஊப், கலாநிதி எம்.எல்.எம்.சல்மா அமீர் ஹம்ஸா, ஏ.எல். தீன் பைரூஸ், எம்.எம்.எம். ஆரிப் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments