ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும்- அரசாங்க பொது ஊழியர் சங்கம் வலியுறுத்து
பாறுக் ஷிஹான்
ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்இ அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அரசியல் நடப்புகள் தொடர்பாக புதன்கிழமை மாலை கல்முனையில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
ஊடகத்துறையை அடக்குமுறை வேண்டாம் எனவும் தற்போதைய ஜனாதிபதியை ஓட ஓட விரட்டியவர்கள் ஊடகத்துறையினர் .மக்களை ஊடகத்துறை தான் வழிநடாத்தியது.ஆகவே ஊடகத்துறையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.நீங்கள்(பிரதமர்) உடனடியாக பதவி விலக வேண்டும்.மக்கள் போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும்.மிலேட்சத்தனமாக பெண் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.ஊடகவியலாளர்களை இப்போராட்டத்தில் தாக்கும் போது இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருந்தது.இதற்கான முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும்.எனவே ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும்.இவ்வாறு விலகி வீடு செல்வதன் ஊடாக உங்களுக்குரிய கௌரவத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என தெரிவிக்க விரும்புகின்றோம்.என்றார்.
No comments