இளைஞர், யுவதிகளுக்கு தலைமைத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை ஒருநாள் பயிற்சி பட்டறை !
நூருல் ஹுதா உமர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த தலைமைத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை ஒருநாள் பயிற்சி பட்டறையும் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி பட்டறையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர். அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் பீ .தியாகராஜா, வாழைச்சேனை தேசிய இளைஞர் கோப் (NYC) நிலைய பொறுப்பதிகாரி மேஜர் கே.எம். தமீம் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள், இளைஞர் பாராளுமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments