இரண்டு நாட்கள் பிரிந்து செயற்பட்டோம் இனி ஒன்றுபடுவோம் ஜனாதிபதி அனைவருக்குமம் அழைப்பு
நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் போட்டியில் கட்சிகள் அனைத்தும் கட்சி தலைவர்களும் இரண்டு நாட்களில் பிரிந்து போட்டியிட்டோம். வேறுபட்டது போதும் இனி இன்று முதல் அனைவரும் ஒன்றித்து நாட்டு நலனுக்காக ஒன்று படுவோம் என இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இருந்த ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் சிரேஷ்ட தலைவர்களின் பெயர்களை விழித்து உரையாற்றிய ஜனாதிபதி தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெறத் தவறிய அமைச்சர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சு மேசைக்கு அழைப்பு விடுத்தார்.
No comments