பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டபோது, அவரின் இந்த அறிவிப்பு வெளியானது.
தற்போது முதல், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இடம்பெறும்.
அந்த நடைமுறை நிறைவடையும் வரையில், ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசியலமைப்புக்கு அமைய, பிரதமர் செயற்படுவார்.
No comments