மியண்டாட் “எப்.எஸ்.கே.”பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டி நாளை ஆரம்பம்
(எம்.என்.எம்.அப்ராஸ்)
சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற கிரிக்கெட் திருவிழாவான எப்.எஸ்.கே.மியன்டாட் பிரிமியர் லீக் சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்று நாளை (13)புதன்கிழமை மிக கோலாகளமாக சாய்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எப்.எஸ்.கே.மியன்டாட் பிரிமியர் லீக் சீசன் -2 போட்டியானது சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுத்தொடர் தலைவர் ஏ.ஏ.ஹலீம், கழகத்தின் தலைவர் ஏ.பாயிஸ், தவிசாளர் எம்.ஜே.எம். காலித்,கழகத்தின் ஆலோசனைக்குழு தலைவர் எஸ்.எம்.அமீர்,உறுப்பினர்களான யு.எல்.பரிட், எஸ். எல். நிசார்,எம்.எச்.எம். பவாஸ் ஆகிய 6 பேர் கொண்ட முகாமைத்துவ குழுவினரின் நெறிப்படுத்தலில்,சாயந்தமருது மின்டாட் விளையாட்டுக்கழகத்திதினரை ஒன்றினைந்து சாந்தம் சலன்ஜேஸ், மருதூர் வோரியஸ், வோலி லயன்ஸ் மற்றும் மாளிகா யூனைடட் ஆகிய நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு குறித்த போட்டிகள் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும் இதன் மூலம் கழக வீரர்களின் கடினபந்து கிரிக்கெட்டினை மேம்படுத்தகுடியதாக அமைந்துள்ளது.
வோலி லயன்ஸ் கழகத்தின் உரிமையாளராக ஏ.எல்.எ. நாசர் அவர்களும் அணித் தலைவராக ஏ.எம்.ஜஹான் அவர்களும், மருதூர் வோரியஸ் கழகத்தின் உரிமையாளராக நவாஸ் அவர்களும்அணித் தலைவராக ஏ.ஏ.எம்.யுனுஸ் பர்வாஜ் அவர்களும்,சாந்தம் சலன்ஜேஸ் கழகத்தின் உரிமையாளராக ஆர்.எம்.ரினோஸ் அவர்களும் அணித் தலைவராக ஏ.எச்.எம். முர்சித் அவர்களும் மாளிகா யூனைடட் கழகத்தின் உரிமையாளராக யு.கே.நஜீம் அவர்களும் அணித் தலைவராக ஐ.அன்வர் ஆகியோர் உள்ளனர்.
இப் போட்டிகள் யாவும் சாய்தமருது பொது விளையாட்டு மைதானத்தில்( 13.07.2022 )புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் (15.07.2022)ஆம் திகதி வரை இறுதிப் போட்டியுடன் குறித்த எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் சீசன் -2” நிறைவடையவுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் 30 வருடத்துக்கு மேல் வரலாற்றை கொண்ட முன்னணி கழகமான சாயந்தமருது மியான்டாட் கழகத்தின் சுமார்80 கடின பந்து விளையாட்டு வீரர்கள் குறித்த போட்டியில் மொத்தமாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
“எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் சீசன் -2” கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான புதியகழக சீருடைகளை அறிமுகம் போட்டி பற்றிய இருதிக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் (11) மாளிகைக்காடு அல் ஹுஸையின் வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது.
No comments