Breaking News

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2 ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை  பெறுகிறார்.


இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு  ராம்நாத் கோவிந்த் ஆகியோர் ஜனாதிபதியை  வரவேற்றனர். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரௌபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஜனாதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் புதிய ஜனாதி பேசியதாவது; “இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கௌரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என்று கூறினார்.




No comments

note