கந்தளாயில் பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனினால் கந்தளாயில் அமைந்துள்ள மூன்று பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர்பெற்றுக்கொடுக்கப்பட்டு மாணவர்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு (2) நடைபெற்றது.
அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவரும் சமூகசேவையாளருமான கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரான ஆசிரியர் ஏ.எல்.முகமட் நபீல் கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலைகளான பாத்திமா பாலர் பாடசாலை, அஸ்-ஸபா பாலர் பாடசாலை, ஆயிஷா பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கே இக்குடி நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments