Breaking News

புத்தளத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் "தேசகீர்த்தி" பட்டம் வழங்கி கௌரவிப்பு

(ரஸீன் ரஸ்மின்)

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் புத்தளம் மாவட்ட விஷேட ஒன்னுகூடல் நேற்று  சனிக்கிழமை (04) புத்தளம் ICE TALK மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


பேரவையின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் பஹத் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.எச்.எம்.சபீக் உட்பட அங்கத்தவர்களான சமாதான நீதவான்களும் கலந்துகொண்டனர்.


இதன்போது, இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும், புத்தளம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இந்த ஒன்றுகூடலில் கலந்துரையாடப்பட்டது.


இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் சமூக சேவை, அரசியல் மற்றும் ஊடகத்துறையில் பிரகாசிக்கும் மூன்று  ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் மேற்படி விருது வழங்கப்பட்டன.


ஊடகவியலாளர்களான ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம் மற்றும் ஆர்.எம்.சப்ராஸ் ஆகிய மூன்று ஊடகவியலாளர்களுடன் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆஷிக் உட்பட ஒன்பது பேர்  இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன், இந்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்த சமாதான நீதிவான்களுக்கும் இதன்போது சான்றிதழ்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















No comments

note