Breaking News

இந்தியாவின் 'செந்தமிழ் சுடர்' கலைஞர் விருது பெற்றார் சிரேஷ்ட எழுத்தாளர் றிப்கா அன்ஸார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை மற்றும் சேலம் அக்ஷ்ய் டிரஸ்ட்  ஆகிய 4 அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான இவ்வாண்டு (2022) 'முத்தமிழ் கலைஞர் பெருந்சுடர்' விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது எனும்  ஊரைச் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளர் றிப்கா அன்ஸார் 'செந்தமிழ் சுடர்' கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பிரதி அதிபரான இவரை கல்விச் சமூகம் பாராட்டி மகிழ்கிறது.





No comments

note