Breaking News

நற்பிட்டிமுனையின் முதல் பெண் அதிபராக நியமனம் பெற்ற திருமதி முனாஸிர் : வீரத்திடல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபராக நியமனம்.

நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்விவலய நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு அதிபராக கடமையாற்றிய நற்பிட்டிமுனையை சேர்ந்த திருமதி முனாஸிர் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரத்திடல் கமு/ சது/ அல்- ஹிதாயா மகா வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.  


நற்பிட்டிமுனையில் முதல் பெண் அதிபராக நியமனம் பெற்ற திருமதி முனாஸிர் அவர்களைப் பாராட்டி கெளரவித்த நிகழ்வு நற்பிட்டிமுனை அல்- கரீம் பவுண்டேசன் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


அல்- கரீம் பவுண்டேசன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பவுண்டேசன் குழுமத்தின் உறுப்பினர்கள் பங்கு பற்றி பாராட்டி கெளரவித்தனர்.  புதிய அதிபராக நியமனம் பெற்ற திருமதி முனாஸிர் கமு/ சது/ அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோக பூர்வமாக கடமையேற்கவுள்ளார்.







No comments

note