இந்திய தமிழ் நாட்டு மக்களின் அன்பளிப்பு உதவி கல்முனையில் பகிர்ந்தளிப்பு
(சர்ஜுன் லாபீர்)
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டு மக்களிடமிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகை அரிசி பேக்கள் இன்று(05) கல்முனை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ளகல்முனை,கல்முனைக்குடி, மருதமுனை,பெரியநீலாவனை, நட்பிட்டிமுனை பிரிவில் வசிக்கும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இவ் அரசிப் பொதிகள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் 2850 பயனாளிகளுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் கணக்காளர் யூ. எல். ஜவாஹிர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஹுபர்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாசீன் பாவா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
No comments