Breaking News

புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விஷேட கலந்துரையாடல்

புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கிடையிலான விஷேட ஒன்றுகூடல் இன்று நண்பகல் புத்தளம் ஐஸ் டோக் மண்டபத்தில் இடம்பெற்றது.


புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.முஸப்பிர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்கூடலில் செயலாளர், பொருளாளர் உட்பட அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.


இதன்போது, ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் பற்றியும், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


அத்துடன், பாடசாலை மட்ட ஊடக கழகங்களை உருவாக்குதல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடக கல்வி தொடர்பில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து பயிற்சிகளை வழங்குதல், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகப்பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன.


இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் முதற்கட்டமாக முந்தல் பிரதேசத்தில் உள்ள தெரிவுசெய்யப்படும் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பில் கருத்தரங்குகளை வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு மேற்படி ஊடக பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.


அத்துடன், ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்ந மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டன. அடுத்த மாதம் மேற்படி மாநாட்டை நடத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


இதேவேளை, ஒன்றியத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு திறந்த புகைப்பட போட்டி மற்றும் கவிதைப் போட்டி என்பனவற்றை நடத்துவதற்கும் மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


- முஹம்மட் ரிபாக் -




No comments

note