புதிய அரசியல் கட்சி உதயம் - ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியில் இணையுமாறு அழைப்பு
இந்த நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் போலி நாடகங்களை காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தேசியத்தலைவர் Siddeek Mohamed Sadeek நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளை தமது கட்சியில் இணையுமாறு பகிரங்க அழைப்பு
இப்போதெல்லாம் முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சிகளும் மக்களுக்கு ஒரு முகத்தையும் ஆளுந்தரப்புக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் அரசியலை செய்து வருவதை பரவலாக காண்கிறோம். ஒன்றில் அரசுக்கு ஆதரவாக இருந்து மக்களை வழி நடத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இரண்டும் இன்றி மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு அவர்கள் சுக போகம் அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டி நேர்மையான அரசியலில் ஈடுபட அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி அழைப்பு விடுக்கிறது.
அந்த வகையில் எதிர் வரும் தேர்தல்களில் எமது கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட உங்களை அழைக்கின்றோம்.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் எங்களிடமில்லை. சமூகத்துக்கு சேவை செய்ய நினைக்கும் ஆண், பெண் அனைவரும் எமது கட்சியின் வேட்பாளர்களாகலாம்.
பணக்காரர்கள்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில்லை. மக்கள் சேவையாற்றும், மக்களுடன் அன்பாக பழகும் பணம் படைக்காதவர்களும் வேட்பாளர் ஆகலாம். பணத்தை விட மக்களின் அன்புக்கு அதிக பலம் உண்டு.
ஆகவே இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் எம்முடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு மக்களுக்கான நேர்மையான அரசியல் சேவை செய்ய அன்புடன் அழைக்கின்றோம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்கள் அடையாள அட்டையின் பிரதியுடன் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு வட்சப் அல்லது ஈ மெயில், அல்லது தபாலில் அனுப்புங்கள்.
தலைவர்- முஹம்மது சதீக் 0778232828 செயலாளர் சல்மான் வகாப் ஆசிரியர் 0768407884 ( விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் மலேசிய பாடகர்)
தேசிய அமைப்பாளர்.Jaws Faleel 0763038418
ஈமெயில்: Sadeek 90@gmail.com
முகவரி ;
Srilanka United Front
No#444 Agelawatta Bandarakoswatta Kurunegala
No comments