Breaking News

பாராளுமன்றத்தில் ரணில், மஹிந்த இருவருக்கும் அடுத்தடுத்த ஆசனங்கள் பாராளுமன்ற ஆசன ஒழுங்குகளில் மாற்றம்

புதிய அரசாங்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற ஆசன ஒழுங்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும்  முன்னாள் பிரதமருமான மைந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அடுத்தடுத்து ஆசனங்களில் அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இழந்தாலும் அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு ஆளும் தரப்பின் முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும் விதிமுறைகள் சட்டங்களுக்கு இணங்க பாராளூமன்ற செயலாளர் இந்த ஒழுங்குகளைமேற்கொண்டுள்ளார்.




No comments

note