Breaking News

ஜும்ஆத் தொழுகை நடாத்துவது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அறிவிப்பு.

நூருள் ஹுதா உமர்

அனைத்து பள்ளிவாசல்கள் தக்யாக்கள் மற்றும் ஸாவியாக்களின் நம்பிக்கையாளர்கள் , பொறுப்பாளர்களுக்கு  பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை நடாத்துவது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ( ACJU ) அறிக்கை பற்றிய தெளிவுபடுத்தல்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். 


அந்த அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல்களில் மாத்திரம் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகை நடாத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ( ACJU ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கொவிட் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாலும் முழுமையாக நீக்கப்படாததாலும் இலங்கை வக்பு சபையோ அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ குறித்த விடயத்தில் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை . அதன் பிரகாரம் தற்போது நடைமுறையில் உள்ள தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் ஜும்ஆத் தொழுகை நடாத்துவதற்கு இலங்கை வக்பு சபையினால் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் , பொறுப்பாளர்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். 


மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை வக்பு சபையினால் ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அது அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அறியத்தரப்படும் .


 இது தொடர்பாக மேலதிக தெளிவுகள் தேவைப்படும் பள்ளிவாசல் நிருவாகங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்று தெரிவித்துள்ளார்.




No comments

note