உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டம் கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்துக்கு உபகரணங்கள் கையளிப்பு !
(எம்.என்.எம் அப்ராஸ், சர்ஜுன் லாபீர்)
"உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் "கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
"உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் "கீழ் முதலாம் கட்டமாக ஒரு தொகுதி புதிய கதிரைகள் மற்றும் மேசைகள் திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களுக்கான கதிரைகள்,மேசைகள், ஆசிரியர்களுக்கான கதிரைகள், வைட் வோர்ட் (White Board) மற்றும் Indicate Board (சுட்டிகாட்டி பெயர் பலகை) தளபாடங்கள் என்பன கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்ப்பாட்டில் இன்று (29)பிற்பகல் பாடசாலையில் இடம்பெற்றது
இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டனர் .
இத்திட்டத்திற்க்கு பாடசாலையின் பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகளின் பங்களிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில்,கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயமானது 1936 இல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் எண்பத்தி ஆறு வருடங்கள் (86 வருடங்கள்) பழமை வாய்ந்த பாடசாலையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments