Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த நெய்னா மரைக்கார் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும் கடையாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்கலான அப்துல் அஸீஸ், ஸபியா உம்மா ஆகியோரின் அன்பு மகன்  நெய்னா மரைக்கார் காலமானார்.


 انا الله وانا اليه راجعون


அன்னார் பர்ஸாவின் அன்பு கணவரும், அப்துல் லத்தீப் (சம்முமாமா), மர்ஹூம்கலான அப்துல் ரசீது,  ஹதீஜா பீவி ஆகியோரின் சகோதரரும், பயாஸ்,  பாஹிம், பஸீல், பஸான், பினோஸ், பாரிஸ்,  பஸ்மினா, பஸ்லிஹா, பாயிஸா. ஆகியோரின் அன்பு தந்தையும், ரிஸ்வான்,ஆதம்அலி, ஹஸான், ரைஸா, ஜெஸ்மினா, அஸ்ரா, ஹஸீனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 11.04.2022 காலை 09:00 மணி அளவில் கடையாமோட்டை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ


பொருள் :- இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்க செய்வாயாக! மேலும் இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம்




No comments

note