Breaking News

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை வலயக் கல்வி அலுவகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று(6)வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் கல்வி வலயத்தின் புதிய கட்டத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.


இந் நிகழ்வில் மெளலவி எம்.எச் ரியால்(ஹாஸிபி) அவர்களினால் விசேட மார்க்க சொற்பொழிவு இடம்பெற்றதுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் அஸ்ரப்,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம் ரிபாஸ்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் ரஸ்மி,நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரயீஸ்,முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,முன்னாள் பிரதிப் கல்விப் பணிப்பாளர்கள் தற்போதைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள்,நிறுவனத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வு வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையிலான குழுவினரின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















No comments

note