சம்மாந்துறையில் பலத்த கோஷத்துடன் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !
(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்)
நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாவது நாளாக இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தலைமையில் வியாழக்கிழமை இரவும் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், விவசாய அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, பச்சிளம் குழந்தைகளை கொன்ற கோத்தாவே வெளியேறு, நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி, பசளை தா, பெற்றோல் தா, மொட்டின் முட்டுக்கள் வெளியேறுங்கள், கோத்தா நாட்டை விட்டு வெளியேரு, அடுத்து இறக்கப்போவது போவது யார், ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு, அரசே வீட்ட போ, போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்மாந்துரை பொதுசந்தையிலிருந்து ஆரம்பித்து ஹிஜ்ரா சந்திவரை சென்ற ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை சம்மாந்துறை பொலிஸார் துரிதகெதியில் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது.
No comments