கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு.!
எம்.என்.எம்.அப்ராஸ்
தேசிய இளைஞர் செஸ் சாம்பியன் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்கள் தேசிய ரீதியில் நடக்கவிருக்கும் செஸ் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான
செஸ் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 14
வயதுப்பிரிவில் அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகாளான எப்.எப்.இல்மா,எம்.ஏ.எப். இல்பா,ஏ.ஆர்.எப்.அனுபா ஆகியோர் 1ம், 2ம், 3ம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
பெண்களுக்கான 10 வயதுப்பிரிவில் நடைபெற்ற போட்டியிலும் அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகாளான எஸ்.எப். அஜா அப்ரின், எம்.எப். ரிஸ்கா ஆகியோர் 1ம், 3ம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இப்போட்டிக்காக மாணவர்களை பயிற்றுவித்து தயார்படுத்திய பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஜெ.முபீத்,ஏ.ஜே.எம். சாபித் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ,மேற்குறித்த மாணவர்கள் அனைவரும், பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தலைமையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
No comments