Breaking News

கல்முனை அஸ்-ஸுஹறாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு !

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் "Wizard Box" எனும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதியா தலைமையில் நேற்று(31)  பாடசாலை வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 

 

முன்னாள் அமைச்சர், கலாநிதி மர்ஹூம் ஏ. ஆர். மன்சூர் அவர்களின் புதல்வியும்,ஏ ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும்,பிரபல சமூக சேவையாளருமான சட்டத்தரணி மர்யம் நளீமுதீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 


மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளரும் பிரபல தேசம்மறிந்த வளவாளருமான வை ஹபிப்புல்லா கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்வி அதிகாரி வி.எம் சம்ஸம்,நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.எச் ரஹீம் ஆசிரியர் ஆலோசகர்கள்,ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அதிதிகளால்  மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது


இப் பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தடைத்தியடைந்ததோடு 70 ற்கு மேற்பட்ட புள்ளிகளை 49 மாணவர்கள் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நடத்திய இந் நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் "சுஹறாவின் ஊற்று" என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டு இந் நிகழ்வு மிக விமரிசையாக இரவு நேர நிகழ்வாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.














No comments

note