Breaking News

சர்வதேச சே தினத்தை முன்னிட்டு சோஷலிச இளைஞர் சங்கத்தின் (SYU) ஏற்பாட்டில் புத்தளத்தில் மரம் நடுகை

இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.


🔸 ஒக்டோபர்  08 ஆம் திகதி சர்வதேசிய ரீதியாக அனுஷ்டிக்கப்படும் International CHE Day (சர்வதேச சே தினத்தை) முன்னிட்டு,


சோஷலிச இளைஞர் சங்கத்தின் (SYU) ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக,


புத்தளத்தில் மூலிகை மரம் நடுகை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


2021.10.19 (செவ்வாய்க்கிழமை):

ரத்மல்யாய, 6 ஆம் வீயில் அமைந்துள்ள முன்பள்ளிப் பாடசாலையிலும்,


2021.10.20 (புதன்கிழமை):

கரைத்தீவு-பொன்பரப்பி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திலும்,


இம்மூலிகை மரம் நடுகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


🔸 இந்நிகழ்வுகளில் சமூகத் தலைமைகள், கல்விமான்கள், இயற்கை ஆர்வலர்கள், பிரதேசவாசிகள் பங்கேற்கவுள்ளனர்.


SYUவின் புத்தளம் தொகுதி அமைப்பினர் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.





No comments

note