COCO SWIMMING POOL யின் முதல் ஆண்டு நிறைவு விழா.
COCO SWIMMING POOL யின் முதல் ஆண்டு நிறைவு விழா கடந்த 06/10/2021 ஆம் திகதி COCO SWIMMING POOL நிறைவேற்று உரிமையாளர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.நஜீம் (ஸர்கி) தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிகவிமர்சையாக இடம்பெற்றது.
COCO SWIMMING POOL ஆனது கடந்த வருடம் 15/09/2020 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்பிட்டி பிரததேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் மற்றும் அதிதிகளாக ஜனாப் என்.எம்.ஏ. பஸீர் - தலைவர் பெரிய பள்ளி கனமூலை, ஜனாப் என்.எம்.எம்.சித்தீக் உரிமையாளர் (Farsana Export), ஜனப் எம்.எஸ்.எம். ஸஹீர் - அதிபர் அல்ஹிலால் தேசிய பாடசாலை - நீர் கொழும்பு, என்.எம்.எம். நஜீப் அதிபர் பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை, எம்.இஸட்.எம். அல்மாஸ் - சட்டத்தரணி, அஷ்ஷெய்க் எப்.ஆர்.எம். பர்ஸாத் (மதனி), எம்.எஸ்.டீ. அமான் - தலைவர் வர்த்தக சங்கம் - மதுரங்குளி, எம்.எச்.எம்.ஹஸான் - ஸ்டார் லைட் விநியோகிஸ்தர் புத்தளம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பயிற்சியை நிறைவு செய்த முதல் 30 மாணவர்களுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டதோடு மாணவர்களால் உரிமையாளர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஸர்கி) அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
COCO SWIMMING POOL ஆனது வடமேல் மாகாணத்தில் காணப்படும் சகல வசதிகளும் கொண்ட நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள 25M (மீட்டர்) நீளமும், 9 அடி ஆழமும் கொண்டது இது புத்தளம் - மதுரங்குளி பெருக்குவட்டானில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments