ஜனாதிபதி அவர்களின் சேதனப் பசளை அதாவது இயற்கை உரத்திட்டம் உண்மையில் வரவேற்கக்கூடியதுதான்.
நஞ்சற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம்.
ஆனால் சரியான திட்டம் பிழையான நேரத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் அரசாங்கத்திற்கு பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் நாட்டிற்கு தேவையான இந்தத் திட்டம் முறையான தயார்படுத்தலின்றி அரசாங்கத்தால் அமுல்படுத்த எடுத்த தீர்மானம் விவசாயிகளுக்கு பலத்த உரத்தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் செயற்கை இரசாயன உரங்களை நீண்ட காலமாக தமது விவசாயத்தின் உள்ளீடாக பாவித்து வந்த விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் இயற்கை உரப்பாவனை அறிவிப்பு தமது பயிர்ச்செய்கையில் பலத்த கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருந்தாலும் ஜனாதிபதியின் இந்தத் திட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகள் இந்த இயற்கை உரப்பாவனை திட்டத்தில் தம்மை படிப்படியாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பில் விஷேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை விவசாயத்திற்கான ஜனாதிபதி செயலணி என இது அழைக்கப்படுகிறது.
இந்த செயலணி பின்வரும் பிரதான நோக்கங்களை கொண்டு செயற்படும்.
அபிவிருத்தி அடைந்த விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்.
நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் நஞ்சற்ற விவசாய உற்பத்திகளைப் பெற்றுக் கொடுத்தல்.
சுற்று சூழல் பாதுகாப்பு பொருத்தமான பயிர்களை அறிமுகப்படுத்தல்.
முதலாளித்துவ இலாப நோக்கு சந்தைப் பொருளாதாரத்தில் இத்தகைய செயன்முறை கடினமாக இருந்தாலும்
இந்த இயற்கை உரப்பாவனை வேலைத்திட்டம் மக்களுக்கு அவசியமானது.
அன்புடன்
யூ.எல்.எம்.என். முபீன்
No comments