முந்தல் பிரதேச செயலகத்தில் மிகசிறப்பாக இடம்பெற்ற இரத்ததான முகாம்!
முந்தல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட இரத்த தான முகாம் இன்று (14) மிகசிறப்பாக நடைபெறுற்றது.
இதற்கான அனுசரணையை றம்ய லங்கா வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் முந்தல் பிரதேச செயலாளர், அபிவிருத்தி செயலணி உத்தியோகத்தர்களின் மாவட்ட செயலாளர், மற்றும் ரம்ய லங்காவின் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Covid 19 தொற்றுநோய் பரவலின் மிகவும் இக்கட்டான சூழ்நிலை காணப்படும் ஒரு சந்தர்ப்பத்திலும் அவசர இரத்த தேவை மற்றும் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு நாட்டில் பின்பற்றப்படும் Covid சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இரத்தம் வழங்கும் நன்நோக்கில் 96 பேர் இரத்தம் வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டு குழு மற்றும் அனுசரணை வழங்கிய ரம்யா லங்கா அமைப்பினர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர். அத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் மரக் கன்றொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
No comments