Breaking News

இராஜினாமா செய்ய போவதாக அறிவிப்பு

வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவியில் இருந்தும் விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.


வெள்ளைப்பூடு ஊழல் மோசடி தொடர்பில் தனக்கோ தன்

குடும்பத்தினருக்கோ தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சுப் பதவிகளிலிருந்து மாத்திரமல்ல இலங்கை அரசியல் களத்தில் இருந்தும் தான் நிரந்தரமாக ஒதுங்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இவ்விடயங்களில் தனக்கு அரசாங்க தரப்பில் உள்ள ஒரு சிலராலும் சதி இரண்டகம் செய்யப்படுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வெள்ளைப்பூடு ஊழல் குறித்த குற்றச்சாட்டினால் அரசாங்கம் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதில் இருந்தும் தான் தவிர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்




No comments

note