பணி நிறுத்தம் தொடரும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானம்
மாணவ சமுதாயத்துக்கு அநியாயம் செய்ய வேண்டாம் அமைச்சர் பிரஷாந்த
எதிர்வரும் 21ஆம் திகதி கடமைக்கு செல்லாமல் இருக்கவும் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.
இவ்வியமாக கருத்து தெரிவித்துள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பது ஆகவும்
மாடி மாளிகைகளில் சுகபோகமாக வாழ்ந்த மோசடிக்காரர்கள் பாடசாலைகளில் குப்பைகளை சுத்தம் செய்யும் நிலைக்கு ஆசிரியர்களின்
போராட்டம் வழிவகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த
கருத்து தெரிவிக்கையில் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் இவ்விடயத்தில் நடுநிலைக்கு வரவேண்டும் போராட்டம் நியாயமாக இருந்தாலும் போராட்டத்தை
நடத்துகின்றவர்கள் நியாயமானவர்கள் அல்ல எனவே மாணவ சமுதாயத்திற்கு இந்த அநியாயத்தை செய்யவேண்டாம் எனவும் அவர் அதிபர் ஆசிரியர்களை வினயமாக வேண்டியுள்ளார்.
No comments