Breaking News

சவூதி அரேபியாவில் இயங்கி வரும் மதீனா பல்கலைக்கழகத்திற்கு கனமூலை அஸ்ஜத் தெரிவு.

சவூதி அரேபியாவில் இயங்கி வரும் மதீனா பல்கலைக்கழகமான ஜாமியத்துல் இஸ்லாம் பில் மதீனாவிற்கு வருடா வருடம் மௌலவி பட்டம் முடித்த மாணவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப்ப மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழமை.  


அந்த வகையில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்ட ஜாமியத்துல் இஸ்லாமிய்யா சவூதி அரேபியா பல்கலைக்கழகத்தில் புத்தளம் மதுரங்குளி -  கனமூலையைச்  சேர்ந்த பாசர் சாலிபு மற்றும் சித்தி ஹைரா  தம்பதிகளின் புதல்வரான அஷ்ஷெய்க் எஸ். அஸ்ஜத்  (காசிமி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றதுடன்  புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் 7 வருடங்கள் கல்வி கற்று மௌலவி பட்டம் முடித்து வெளியேறியவராவார்.


இலங்கை யாழ்  பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றதுடன் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகித்து வருகின்றார்.


இவர் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்  ஒன்றியத்தின் வடக்கு ஒருங்கிணைப்பாளராகவும் கடமை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.




No comments

note